புத்த துறவிகள் மீது தாக்குதல்: பயணத் தடை, இலங்கை விமானங்கள் பாதியாக குறைப்பு!
"தமிழகத்தில் இரு புத்த துறவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும் செயல்" என்று தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு, இலங்கையர்கள் தமிழகம் செல்வது குறித்த பயணத்தடை விதிப்பது பற்றி ஆலாசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக, இலங்கையிலிருந்து தமிழகத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமான சேவைகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. இதுவரை வாரம் 28 தடவைகள் இடம்பெற்ற விமான சேவைகள் நாளை முதல் 14 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு பயணம் செய்யும் இலங்கையர்கள் தம்மை பற்றிய விபரங்களை தமது அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்கிறது, அந்த அறிவிப்பு.
தமிழகத்தில் புத்த துறவிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் எல்பிட்டி பஸ் நிலையத்தில் புத்த பெண் துறவி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
புத்த துறவிகளின் பெரிய சங்கங்களான மல்வத்தை மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் ஆகியோர் கையெழுத்திட்டு கண்டன மகஜர் ஒன்றை கண்டியில் உள்ள இந்திய உதவி தூதருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கையில் கண்டியில்தான் புத்த மதத்தினரின் பெரிய விகாரையான தலதா மாளிகை உள்ளது. அந்தப் பகுதியிலும், அதற்கு அருகில் உள்ள மாத்தளை, நுவரெலியா, ஆகிய பகுதிகளிலும் ஏராளமான இந்திய தமிழர்கள் வசிக்கின்றனர். கொழும்புவில் அதிக வர்த்தக நிறுவனங்கள் இந்திய தமிழர்களுக்கு சொந்தமானவை.
இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 16 லட்சம்! இவர்கள், ஈழத் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இல்லை. சிங்கள மக்களுடன் மத்திய மாகாணத்தில் வசிக்கிறார்கள்! இவர்களில் பெரும்பாலானவர்கள், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இலங்கை சென்றவர்கள்!
Read more: http://viruvirupu.com/2013/03/20/50364/#ixzz2O3fBo3XR
No comments:
Post a Comment