சி.ஐ.ஏ., சிரியாவில் போராளி இயக்க தளபதிகள் சிலர் மீது 'கண்' வைக்கிறது! விரைவில் 'வெடி!'
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., சிரியாவில் சில 'ரகசிய' உளவு விமான தாக்குதல்களை நடத்தலாம் என்று உளவு வட்டாரத் தகவல் ஒன்று உள்ளது. சிரியாவில் தற்போது அரசு ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பில் உள்ள சிலரை குறிவைத்து உளவு விமான தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள்.
இதில் தமாஷ் என்னவென்றால், சிரியாவில் தற்போது அரசு ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் ரகசியமாக ஆயுதம் கொடுக்கின்றன. வேறு உதவிகளும் செய்கின்றன.
அப்படி இருக்கையில், அதே போராளி அமைப்பினர்மீது ஏன் குறி வைக்க வேண்டும்?
விஷயம் இருக்கிறது. ஈராக்கில் இருந்த அல்-காய்தா தளபதிகள் சிலர், தற்போது சிரியாவுக்குள் சென்றிருக்கிறார்கள். சிரியா ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினருடன் இணைந்து செயல்படுகிறார்கள். இவர்களைத்தான் குறிவைக்கிறது சி.ஐ.ஏ. என்கிறார்கள்.
சி.ஐ.ஏ.வின் Counter terrorism Center ஒன்று கலிபோர்னியாவில் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஏமனில் உள்ள தீவிரவாத இயக்க தளபதிகளை உளவு விமானங்கள் அனுப்பி சுடுவது, இந்த கலிபோர்னியா சென்டரில் இருந்துதான் நடைபெறுகிறது.
இந்த சென்டரில் தற்போது, சிரியாவை 'கவனிக்கும்' சிறப்பு டீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். …அடுத்த பக்கம் வாருங்கள்
Read more: http://viruvirupu.com/2013/03/18/50009/#ixzz2NrbA5c4H
Read more: http://viruvirupu.com/2013/03/18/50009/#ixzz2Nrb2IAbD
Read more: http://viruvirupu.com/2013/03/18/50009/#ixzz2NrarIy8K
No comments:
Post a Comment